Thursday, 5 July 2012

கோலங்கள்
--------




பாடல்




ஒளிவடிவில்





கோலங்கள் 2003 to  Dec 04-2009
-----------
அபிஷேக் ---------- பாஸ்கர்
அமலா ------------- அஞ்சலி
அஜய் கபூர் --------------- ஆதித்யா
ஆதவன் -------------------- தோழர் பாலகிருஸ்ணன்
ஆராஅமுதன்
கண்ணன் ----------------- ராஜேஷ்  அப்பா
கர்ணா ------------------ கலா கணவன்
கல்பனாஸ்ரீ -------------------- சாந்தி
கவிதா   ------------------- சங்கீதா
காஞ்சி இனிதா -------------------- கலைவாணி
கிரி ----------------------- கிரி
கீதா ரவிசங்கர்   ------------------- உமா அம்மா
கீர்த்தனா ---------------- உமா
குயிலி --------------------- சாரதா
கோவி மணிசேகரன் ------------- தாசய்யா
சக்திவேல் ------------------- அருணாசலம்
சந்திரா லக்ஷ்மணன் --------------------- கங்கா
சதீஸ் ----------------- விவேகானந்தன்
சத்தியப்பிரியா ---------------- கற்பகம்
சஞ்சீவ்
சபீதா ஆனந்த் ------------------ லைலா
சாரதா விஸ்வநாத் ---------- அஞ்சலி
சினேகா நம்பியார் ---------------- ரஞ்சனி
சுப்ரியா ------------------ ஆனந்தி
சுபலேக சுதாகர் --------------- நாரயணன்
செந்தில்   --------------- சிற்றம்பலம்
டிங்கு ------------------ அர்ஜுன்
தங்கராஜா MLA ------------- தங்கராஜா
தமிழ்குமரான் ------------------ சங்கரபாண்டி
திருச்செல்வம் ---------------- தொல்காப்பியன்
திவ்யதர்ஷ்ணி ------------------ அஞ்சலி
தீபா   ------------------- சுந்தரி
தீபா --------------------- அனு
தீபா வெங்கட் ----------------- உஷா
துளசி ------------------ கிருஸ்ணன்
தேவ் ஆனந்த் ------------------- சதிஷ்
தேவதர்ஷிணி ------------------- சுஜாதா
தேவயானி -------------- அபிநயா
நடராஜா K ------------------- அந்தோனி
நர்மதா
நளினி ---------------------- அலுமேலு
நாகலட்சுமி ----------------- கலா
நரேந்திரா -------------------- உபேந்திரா
நிஷா --------------- அனு
நீபா ---------------- வாசுகி
நீலிமா ராணி ------------------ ரேகா
பம்பே ஞானம்   ------------------- பாட்டி
பாரதி -------------------- காஞ்சனா
பிரேம்குமார் --------------------- முரளி
பூவண்ணன்
பூஜா ------------------- சந்திரா
பிரசன்னா ரவி ----------------- வித்யா
பிர்லாபோஸ் ------------------- இன்ஸ்பெக்டர் பிரபு
பிரபாகர் -------------------- ரமேஷ்
பிரியதர்ஜினி -------------------- வித்யா
பூர்ணிமா இந்திரஜித் ----------------- மேனகா/செல்லம்மா
பொன்வண்ணன் ------------------- பாஸ்கர் மாமா
மஞ்சரி ------------------- ஆனந்தி
மதன்   --------------- மோடி
மோகன் சர்மா -------------------- ஈஸ்வரன்    
லோகநாயகி ------------------- ரங்கநாயகி
ரங்கதுரை -------------------- சங்கரபாண்டி
ரவிவர்மா
ரஜினி ------------------ ஈஸ்வரி
ராகவேந்தர் TS   ------------------ பாதிரியார்
ராமசந்திரன்   ----------------- திருவேங்கடம்          
ராஜசேகர் ------------- திருமால்சாரி
ராஜேந்திரன் --------------- ராஜேந்திரன்
ரேவதிபிரியா ---------------- சுமதி
ரோஜாஸ்ரீ ---------------------- கீதா
வனஜா ----------------- ஜெயசித்ரா
வந்தனா ---------------------- சுஜாதா
வனிதா கிருஷ்ணன் ----------------- சாரதா
விழுதுகள் சந்தானம் -------------------- குணசேகரன்
விஜய சாரதி --------------------- பாரதி
விஜி சந்திரசேகர் ---------------------- பாஸ்கரின் அக்கா
விஷ்வா --------------------- கார்த்திக்
யுகேந்திரன் ----------------- சிவதாஸ்
ஷியாம் ------------- ராஜேஷ்
ஸ்ரீதர் ----------------- மனோ
ஸ்ரீதர் ஆடிட்டர் ----------------- விஸ்வநாதன்
ஸ்ரீவித்தியா ------------------ ஆர்த்தி
ஜோய்   ----------------- ரஞ்சன்





'கோலங்கள்' நிறைவடைந்தது......
saradhaa_sn 

என்ன ஒரு கவித்துவமான, கவிதை நயமான முடிவு. எதிர்பார்த்த அதே சமயம் எதிர்பாராத முடிவு.

அபி ஒவ்வொருமுறையும் தன் உறவுகள் தன்னைக் காயப்படுத்தும் போதெல்லாம் மன்னித்துக்கொண்டே இருக்கிறாள் என்று எண்ணினோம். ஆனால் உள்ளுக்குள் உடைந்துகொண்டே இருந்திருக்கிறாள். இன்னொருமுறை மனம் உடைந்தால் தாங்காது என்பது மட்டுமல்ல, எதிர்பார்ப்புக்களோடு வாழும் தன் உறவுகள் தன்னை எந்த நாளும் புரிந்துகொள்ளப் போவதில்லை என்ற விரக்தி, வேதனை, இவற்றால் உறுத்தப்பட்டவளாய் தான் நேசித்த, நேசிக்கும் வாழ்க்கை இதுவல்ல என்பதை உணர்ந்தவளாய் புறப்பட்டுவிட்டாள்.

இம்முறை தாயின் ஆறாகப்பெருகிய கண்ணீரும், தந்தையின் பாசம் நிறைந்த புலம்பல்களும் அவளது பயணத்தைத் தடை போட முடியவில்லை. தம்பி, தங்கையின் கெஞ்சலும், சித்தப்பாவின் வேண்டுகோளும் அவளை நிறுத்த முடியவில்லை. லட்சங்களை எண்ணி வாழும் உங்கள் வாழ்க்கை வேறு, லட்சியங்களைச்சுமந்த என் வாழ்க்கை வேறு என்று உணர்த்தியவளாய் புயலென புறப்பட்டுவிட்டாள். கார்களில் ஏறமாட்டாள் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். குறைந்த பட்சம் ஒரு ஆட்டோவில் ஏறிப்போவாள் என்று நினைத்தோம். ஆனால், நடையாக நடந்தாள். பின்னாலேயே விரட்டி வந்த உறவுகள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்தில் நின்று விட்டனர், இனி அவளைத் தடுக்க முடியாது என்ற காரணத்தால்.

கடற்கரைக்கு வருகிறாள். எல்லாமே முடிந்துவிட்டது போன்ற ஒரு விரக்தி நிலை. தன் செருப்பில் ஒட்டியிருக்கும் தூசி கூட தனக்குச் சொந்தமில்லை என்பது போன்ற சூன்யம். நடந்து நடந்து ஒரு படகின் முனையில் சாய்ந்து அமர்ந்துவிட்டாள். கண்களில் ஆறாகப்பெருக்கெடுத்த கண்ணீர். நிச்சயம் அது தனது தூய நண்பனை நினைத்துத்தான் என்பது நமக்குப்புரிகிறது. கேமரா அப்படியே பின்னோக்கிப்போகிறது. 'வணக்கம்' போட்டுவிடுவார்களோ என்று நமக்குள் ஒரு பதைபதைப்பு. கேமரா மறுபக்கம் திரும்ப, அதே படகுமுனையின் மறுபக்கத்தில் அமர்ந்து தன் தோழியைப்பற்றி டைரி எழுதிக்கொண்டிருக்கும் தொல்காப்பியன்.....!!!!!.

எங்கோ தன் உறவுகளோடு இருப்பதாக தான் நினைத்துக்கொண்டிருக்கும் அபியை எண்ணியவாறு தொல்காப்பியன் எழ, தன்னைவிட்டு எங்கோ போய்விட்டதாக தான் எண்ணி ஏங்கும் தன் தோழனை நினைத்தவாறு அபியும் எழ, இதோ... இதோ... சந்திக்கப்போகிறார்கள் என்று நாம் கண்கள் இமைப்பதை மறந்து பார்த்துக்கொண்டிருக்க.....

ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் அந்தப்பார்வையில்தான் எத்தனை ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப்பறக்கின்றன...!!!. தன் செருப்பிலுள்ள தூசி கூட தனக்குச்சொந்தமில்லை என்று சற்றுமுன்தானே நினைத்தேன்... இல்லை... இல்லை... இப்போது இந்த உலகம் முழுவதும் எனக்குச்சொந்தம் என்ற பூரிப்பு முகமெல்லாம் பொங்க, தோழியின் முகத்தில் தெரியும் அந்தப்பூரிப்பு தொல்காப்பியனையும் தொற்றிக்கொள்ள.... அவர்களின் அந்த தூய நட்பின் ஆழத்தை நாம் ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.

காட்சி மாற்றம்.... மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு, வளர்ந்த இந்த இரண்டு குழந்தைகளும் சேர்ந்துகொள்ள, தன்னலத்தைத்தூக்கியெறிந்த எங்கள் உலகம் வேறு என்று அவர்கள் மலர்ந்த முகங்கள் பறைசாற்ற....... நிறைவு. 

கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக, விடுமுறை நாட்கள் தவிர மற்ற எல்லா நட்களும் சரியாக இரவு 9 மணிக்கு நம் வீட்டின் நடுக்கூடத்துக்கு வந்து நம்மோடு ஒட்டி உறவாடிய அபியும், தொல்காப்பியனும், ஆதித்யாவும், உஷாவும் மற்றுமுள்ளோரும் இனிமேல் வரமாட்டார்கள் என்பதே, நம் மனதில் ஒரு வெற்றிடத்தை உண்டாக்குகிறது. இந்த ஆறாண்டுகளில்தான் நம் வாழ்க்கையில் எத்தனை நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன..!. யார் யாரையெல்லாம் இழந்துவிட்டோம்..!. அத்தனையையும் மீறி, இரவு 9 மணியானால் 'அது கோலங்கள் நேரம்' என்று தமிழ் நாட்டில் மட்டுமல்ல, எங்கெல்லாம் சன் தொலைக்காட்சி பார்க்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய தொடர், இனிமேல் இல்லை. திரையுலகிலிருந்து வந்து தொலைக்காட்சியில் தான் ஒரு புது அவதாரம் எடுத்திருப்பதை உணர்த்தும் வகையில் ஒலித்த "பெண்ணே எனது புது கோலம் எழுது" என்ற பாடல் இனி தொலைக்காட்சியில் ஒலிக்காது. எப்போது முடியும் என்று எண்ணியவர்களுக்கும், எப்படி முடியும் என்று எதிர்பார்த்தவர்களுக்கும் விடை சொல்லி, தொடர் விடைபெற்றுவிட்டது.....

அபினயாவாக வாழ்ந்த தேவயானி,
தொல்காப்பியனாக வாழ்ந்த (இயக்குனர்) திருச்செல்வம்
கற்பகமாக வாழ்ந்த சத்யபிரியா
ஈஸ்வரனாக வாழ்ந்த மோகன் சர்மா
ஆனந்தியாக வாழ்ந்த மஞ்சரி
ஆர்த்தியாக வாழ்ந்த ஷ்ரீவித்யா
ஆதித்யாவாக வாழ்ந்த அஜய்கபூர்
மனோவாக வாழ்ந்த ஷ்ரீதர்
தோழர் பாலகிருஷ்ணனாக ஒரு இனத்தின் பிரதிநிதியாக முழங்கிய ஆதவன்
திருவேங்கடமாக வாழ்ந்த ராமச்சந்திரன்
சாரதாக்களாக வாழ்ந்த வனிதா மற்றும் குயிலி
அலமேலுவாகவே அவதாரம் எடுத்த நளினி
பாஸ்கராக வாழ்ந்துகாட்டிய அபிஷேக்
கார்த்திக் ஆக வாழ்ந்த விஷ்வா
பாரதியாக வாழ்ந்த விஜயசாரதி
மேனகா மற்றும் செல்லம்மாவாக வாழ்ந்த பூர்ணிமா இந்திரஜித்
ரேகாவாக வாழ்ந்த நீலிமா
உஷாவாக சுடர்விட்ட தீபா வெங்கட்

மற்றும் ராஜேந்திரன், ராஜேஷ், கலா, ராஜாமணி, ரஞ்சன், முரளி, அனு, அஞ்சலி(கள்), காஞ்சனா, அர்ஜுன், கிரி, தில்லா, சங்கர பாண்டியன்(கள்), தேவராஜ் பாண்டியன், கிருஷ்ணன், விஸ்வநாதன் (ஆடிட்டர்), கங்கா, ராமச்சந்திரன், பரிமளாச்சாரி, சாந்தி, சிவதாஸ், பாதிரியார் (ராகவேந்தர்), தாரகை, உபேந்திரா, அன்வர்பாய், அந்தோனி (நட்ராஜ்), தாசய்யா (கோவி மணிசேகரன்), வெற்றிமாறன், குலோத்துங்க சோழன், சித்ரா...... இன்னும் சொல்ல மறந்த எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள் நம் வீட்டுக்குள் (அது பணக்காரர்களின் பளிங்கு மண்டபமோ அல்லது ஏழைகளின் குடிசையோ) சுற்றியலைந்தார்கள். 

மூன்று மணி நேரம் திரைப்படம் பார்த்தாலே அதன் தாக்கம் நம் மனதில் நிழலாடும்போது, ஒரு மணியல்ல, ஒரு நாளல்ல, ஒரு மாதமல்ல, ஒரு வருடமல்ல, ஆறு வருடங்கள் நம்முடன் வளைய வந்தவர்கள், திடீரென விடைபெற்றுப்போனது போல ஒரு வெறுமை, வெற்றிடம். நாளை முதல் வேறு தொடர் துவங்கலாம். இருந்தாலும் கோலங்கள் விட்டுச்சென்ற இடம் வெற்றிடமாகவே இருக்கும். அந்தப் பாத்திரங்கள் நம் மனதில் நீண்ட நாட்கள் நின்றிருப்பார்கள். 

நான் பெரிதும் மதிக்கும் எஸ்.சத்யா அவர்களால் துவங்கப்பட்ட இந்த கோலங்கள் திரி, பலராலும் தொடரப்பட்டு வெற்றிகரமாக முடிவை எட்டியுள்ளது. வடம் பிடித்து வழிநடத்திய அத்தனை அன்பு இதயங்களுக்கும் நன்றி.

ஆம்.... கோலங்கள் நிறைந்து விட்டது...

No comments:

Post a Comment